சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஊட்டியில் விழிப்புணர்வு மாரத்தான்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஊட்டியில் விழிப்புணர்வு மாரத்தான்
ஊட்டி
பொது போக்குவரத்தை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யு. ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப் பந்தய இயக்கம் நேற்று நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் பிரிக்ஸ் விளையாட்டு மைதானத்தில் இருந்து மாரத்தான் தொடங்கப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா போட்டியை தொடங்கி வைத்தார். மராத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா பரிசு வழங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன், அங்கன்வாடி செயலாளர் சசிகலா, தொழிலாளர் முற்போக்கு தலைவர் ராஜரத்தினம், அரசு போக்குவரத்து கழக துணைப்பொதுச்செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.