விழிப்புணர்வு ஊர்வலம்


விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மன நல மருத்துவத் துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலியப்பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பேசும்போது, மன நலத்தை பேணிக் காக்கவும், மன அழுத்தத்தை எளிதில் போக்கவும் கட்டணமில்லா தொலைதொடர்பு ஆலோசனை எண்ணான 14416-ல் அழைக்கலாம் என்றார். மன நலத்துறை மருத்துவர் அன்பழகன் விழிப்புணர்வு நாளின் கருப்பொருளான செயல்வழி நம்பிக்கை உருவாக்கம் பற்றி பேசினார். கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், நரம்பியல் துறை இணைப்பேராசிரியர் பாலமுரளி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, மனநல மருத்துவர் சண்முகபிரியா வரவேற்றார். முடிவில் மருத்துவர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story