போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கி பேசினார். ஊர்வலமானது கல்லூரியில் இருந்து தொடங்கி, அண்ணா சிலை, நான்கு ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்து முடிவடைந்தது. முன்னதாக போதை பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்களை எம்.எல்.ஏ. வாசிக்க பின் தொடர்ந்து மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் வாசித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தில் சில குடும்பங்கள் படும் அல்லல்கள் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து துறைத்தலைவர்கள், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி, போலீசார், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.


Next Story