போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பதாகைகளை ஏந்தி...

ஊர்வலமானது வேளாங்கண்ணி பழைய போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைத்தெரு, பேராலயம் தெரு, கடற்கரை சாலை வழியாக சென்று கடற்கரையில் உள்ள பூங்காவில் நிறைவடைந்தது.

அப்போது மது மற்றும் போதை பொருட்களால் எற்படும் தீமைகள் குறித்தும், மதுவுக்கும், போதைப்பொருட்களுக்கும் யாரும் அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், செவிலியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.


Next Story