பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கொடியாலத்தூர் ஊராட்சி தலைவர் ரேவதி அய்யப்பன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்கொடுமையை ஒழிப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மகளிர் சுய உதவி குழுவினர் ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான உறுதிமொழி ஏற்கப்பட்டது. முகாமில் கீழ்வேளூர் வட்டார மகளிர் திட்ட பொறுப்பாளர்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள், ‌‌ ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story