போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருப்பத்தூரில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கு வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பஸ் நிலையம், கோர்ட்டு, அரசு மருத்துவமனை வழியாகசென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி ஆணையர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story