பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
நாகப்பட்டினம்
நாகை புத்தூர் ரவுண்டானாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக சின்மயா வித்யாலயா பள்ளியில் இருந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட சுடரை ஏற்றி வைத்தார். புத்தூர் ரவுண்டானாவில் தொடங்கிய ஊர்வலமானது மேலக்கோட்டைவாசல்படி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வெளிப்பாளையம் வழியாக சின்னையா வித்யாலயா பள்ளியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும், பெண் குழந்தைகளை பாதுகாக்க கூடிய சட்டங்கள் குறித்தும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story