பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

ராஜாராம் மோகன்ராயின் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் வரவேற்றார். இந்த ஊர்வலத்தை கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து தொடங்கி கோவை ரோடு, மனோகரா கார்னர் ரவுண்டானா, ஜவகர்பஜார், கரூர் தாலுகா அலுவலகம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட மைய நூலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில், பெண்கள் இல்லாத வீடு சுவர் இல்லாத சித்திரம் போன்றது, பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு செழிப்படையாது, பெண்கள் இல்லாத உலகம் பாலைவனம் போன்றது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனர். இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story