விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x

போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே சிறுவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அ.முக்குளம் போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில் அ. முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் போதைப்பொருளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு போலீசாரால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இதனால் அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story