விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x

போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படியும், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனையின்படியும் அ.முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமான குற்றங்கள் பற்றியும், அவற்றை தடுக்கும் பொருட்டு 1930 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும், பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வு பற்றியும், கல்வியின் முக்கியத்துவம், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில் அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர்அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story