இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்


இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x

சின்னசேலத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.

கூட்டத்தில் இயற்கை விவசாயம் எவ்வாறு செய்ய வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆன்லைன் மூலம் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசினார். இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story