விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான மானியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்


விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான மானியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
x

விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான மானியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக தமிழக அரசு வழங்கும் மானியம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் குடியாத்தத்தில் உள்ள தமிழ்நாடு விசைத்தறி, கைத்தறி மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், துணை செயலாளர்கள் சம்பத், துக்காராம், தலைமை சங்க நிர்வாகி யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சசிகுமார் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டு விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக தமிழக அரசு வழங்கும் மானியம் குறித்து விளக்கி பேசினார். மேலும் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான விண்ணப்ப படிவத்தையும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் செல்வபெருமாள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் நன்றி கூறினார்.


Next Story