திராவிடர் கழகம் சார்பில் மாநில மீட்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம்


திராவிடர் கழகம் சார்பில் மாநில மீட்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம்
x

திராவிடர் கழகம் சார்பில் மாநில மீட்பு விளக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி-தேனி ரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் தலைவர் பவுன்ராஜா, மாவட்ட தலைவர் மன்னர் மன்னன் ஆகியோர் தலைமை தாங்கினர். தென் மாவட்ட பிரசார குழு தலைவர் எடிசன் ராஜா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை, மண்டலத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திராவிட இயக்கம் இல்லையென்றால் ஆதீனங்களே இருக்க முடியாது என்ற வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் மதுரை ஆதீனத்திற்கு தெரியாது. தி.மு.க.அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. அதைப்பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாமல் யாருக்கோ யாரோ விடும் வில்லின் அம்பாக இருக்கிறார்கள். விரைவில் அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு திரும்ப வேண்டும் என்றார்.


Next Story