பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும், அப்பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.