மாணவர்களிடம் சமூக நீதி-மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு


மாணவர்களிடம் சமூக நீதி-மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு
x

மாணவர்களிடம் சமூக நீதி-மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாவட்ட போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மாணவ-மாணவகளிடையே பேசுகையில், கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாகவும், சிறப்பான ஆற்றல் மிக்கவராகவும், நல்லெண்ணம், நற்செயல், நற்பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மனிதர்களாக இருக்க முடியும். மேலும் தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம், என்றார். மேலும் அவர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை பற்றி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.


Next Story