பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு
x

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சைல்ட் லைன் பாதுகாப்பு உறுப்பினர் வீரமணி வரவேற்று பேசினார். தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, போக்சோ சட்டம் மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக உள்ள பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விளக்கங்களை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி விளக்கி கூறினார். மேலும் குழந்தைகள் திருமணம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சைல்ட் லைன் அணி உறுப்பினர் வின்சி நன்றி கூறினார்.


Next Story