மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு போஸ்டர்கள்
கோத்தகிரி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
கோத்தகிரி,
கோத்தகிரியில்அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்த நிலையில், தனியார் பள்ளி மீது ஏற்பட்ட மோகம் காரணமாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பின்னர் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பல்வேறு வசதிகள் செய்து மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் அமீலியா அறிவுரைப்படி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், கோத்தகிரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதிகள், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனி அறிவியல் ஆய்வகம் பள்ளியில் உள்ளது. நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்களை நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.