அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

சேதுபாவாசத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் தொடங்கி வைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு வழங்கியுள்ள பெண் கல்வி உதவி திட்டம், 20 சதவீத அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

மாணவர் சேர்க்கை

மேலும் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். ஊர்வலத்தில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீனாசுந்தரி, .சிவசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கென்னடி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சித்திரா, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள் வேலம்மாள், தேவகண்மணி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் ராமர் கோவிலில் முடிவடைந்தது.


Next Story