ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் வழி நடத்தி சென்றனர். ஊர்வலத்தில் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள், அனைத்து சிறப்பாசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலமானது கடைவீதி, நான்கு ரோடு, பஸ்நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.