கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்


கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

75-வது சுதந்திர தின விழாவையொட்டி காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் 75-வது சுதந்திர தினவிழா மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு குறித்த மாணவ- மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் காரைக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார். சிவகங்கை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் பிரவின்குமார் முன்னிலை வகித்தார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். காரைக்குடி துணை சூப்பிரண்டு வினோஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அழகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி சைக்கிள் ஊர்வலம், கல்லூரி சாலை வழியாக கல்லூரியில் நிறைவு பெற்றது. முடிவில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சித்ரா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story