குடியரசு தின தடகள போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


குடியரசு தின தடகள போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டிக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.

ஊர்வலம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வழியாக சென்று அரசு ஐ.டி.ஐ. வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கை வந்து அடைந்தது.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிதாஸ், நளினி, எல்லப்பன், வீரமணி, கார்த்திகேயன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் உள்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story