விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான சுகாதாரம் மற்றும் கால்நடைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உமா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி போடப்பட்டு, ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள், இந்தியன் வங்கியின் வணிக தொடர்பாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.


Next Story