கொரோனா, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொரோனா, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சிவகங்கை
திருப்புவனம்,
டாக்டர் அப்துல் கலாம் கிராமிய கலை குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த கருத்துகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இக்குழுவினர் நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தனிநபர் கழிப்பறை பயன்பாடு, தூய்மை இந்தியா, கொரோனா ஒழிப்பு, டெங்கு காய்ச்சல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, பொது சுகாதாரம், மழை நீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், செயல் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story