நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

புன்னம்சத்திரம் பகுதியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம் கலந்துகொண்டு பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. தொடர்ந்து நெகிழியை பயன்படுத்தும்போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நகர மற்றும் கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்புமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் சாருமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story