சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


சங்கராபுரம் அருகே  அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் டயானா, பிரகாஷ், சின்னதுரை, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கராபுரம் போலீசார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இளம் வயதில் குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் நடைபெறுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படு்த்தினர். மேலும் குழந்தை திருமணமோ அல்லது குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது பற்றி தெரியவந்தால் காவல்துறை உதவி எண்ணான 1098 எண்னை உடனே அழைக்கலாம் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அசோகன், லோகநாராயணன், சத்தியவதி, கோமதுரை, கோவிந்தராஜு, பால சுந்தரி, ஆரோக்கிய லூர்துராஜ் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story