அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

திருவாரூர்
திருவாரூர் திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

போதை பொருட்களை பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஒருமுறை பயன்படுத்தினால் அது தொடர்ந்து உங்களை அடிமையாக்கி வாழ்க்கையினை பாழ்படுத்தி விடும். பள்ளி காலங்களில் நன்றாக படித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும்.

கல்வி ஒன்றே ஆயுதம்


மாணவர்களாகிய நீங்கள் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஆயுதமாகும். கல்வி மட்டுமே உங்கள் எதிர்காலத்தினை தீர்மானிக்கும். உங்களுக்கு தேசப்பற்றும் இருக்க வேண்டும். கல்வி மட்டுமின்றி மாணவர்கள் எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாமல் சுய ஒழுக்கத்தினை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தாசில்தார் நக்கீரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.








Next Story