செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை


மதுரை லேடி டோக் கல்லூரி விடுதி மாணவியருக்கு சைபர் கிரைம் செக்யூரிட்டி மற்றும் செல்போன் பயன்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் கிறிஸ்டியானா சிங் தலைமை தாங்கி, தொழில்நுட்பத்தினால் பல்வேறு நன்மைகள் கிடைப்பினும் அதிலுள்ள தீமைகளை நாம் விட்டு விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அறிமுகவுரையாற்றினார். அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் அருணோதயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார். மாணவ நலனாளர் ஆரோக்கிய சியாமளா பனியரசி , மாணவியர் செல்போனின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இறுதியாக முதல் நிலை காவலர் தேன்மொழி, மாணவியர் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். செல்வி ஆலிஸ் ஜான் நன்றியுரை வழங்கினார். முன்னதாக இவாஞ்சலின் ஆக்னஸ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவ நலனாளர்கள் செய்தனர்.


Next Story