குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஈ.வெ.ரா.நாகம்மை அரசு பெண்கள் பள்ளியில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்ட சைல்டு லைன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் குழந்தைகள் நண்பர்கள் வாரத்தையொட்டி வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வும், வளர்ச்சிக்கான விளையாட்டுகள் நிகழ்ச்சியும் நடந்தது. சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை புவனா, சைல்டு லைன் திட்ட மேலாளர் சரவணன், உதவி திட்ட மேலாளர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவிகள் தங்கள் பகுதியில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையம் மற்றும் 1098 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் மர்மநபர்கள் யாராவது பின்தொடர்ந்து வந்தாலோ, தொடுவதற்கு முயன்றாலோ பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிலம்பம், கோகோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மேலும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் சுபாஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகள் உடல்ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விளையாட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story