ஆற்காட்டில் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆற்காட்டில் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜெயம் நகரில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, மக்கள் தங்கள் வீட்டின் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுப்பதை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரங்களும் இலவசமாக கொடுக்கப்பட்டது. வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு வீடு, வீடாக சென்று உரங்கள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story