தொழில் முனைவோராவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


தொழில் முனைவோராவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தொழில் முனைவோராவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா ஐ.டி.ஐ. இணைந்து தொழில் முனைவோராவது எப்படி என்ற ஐ.டி.ஐ. பயிற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐ.டி.ஐ. வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் கே.சதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.பி.ராஜா மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான தலைவர் மணிகண்டன், ஜெயபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை தலைவர் விஜயன் கலந்து கொண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் தொழில் முனைவோர் ஆவது குறித்து பேசினார்.

அப்போது மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பல உள்ளன. எனவே, வேலை வாய்ப்புகளுக்காக நிறுவனங்களைத் தேடி அலைவதை தடுக்கவும், சுய முயற்சியால் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவுவதற்காக அரசின் மாவட்ட தொழில் மையங்கள் உள்ளன. சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதி நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, அரசு வழங்கும் திட்டங்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக நீங்கள் வருவதற்கு உங்கள் திறன்களை இப்போதில் இருந்தே திட்டமிட்டு செயல்படுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வடிவேலன். பிரதீப், பயிற்சி அலுவலர் சசிகுமார் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் வீரமணி நன்றி கூறினார்.


Next Story