சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களின் தியாகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி இந்தியாவின் அறியப்படாத 8 சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து பேச்சு போட்டி நடந்தது. பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 75-வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் 75 வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மீன்வளக்கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.