பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நன்னிலம் அருகேபெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூர்
நன்னிலம்:
நன்னிலம் அருகே மூங்கில்குடி ஊராட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் விழிப்புணர்வு அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பணியாளர் பாரதி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து பெற்றோர்கள், பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சார்பில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story