பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஜோலார்பேட்டை அருகே பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடையம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஷு கம்பெனியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, இலவச உதவி எண்களான (பெண்கள்) 181, (குழந்தைகள்) 1098, மற்றும் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போலீஸ் ஏட்டு கவிதா, பெண்கள் உதவி மைய அலுவலர்கள் கோமதி, இளவரசி, குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் மதியரசி, தீபா மற்றும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 25 பெண்களின் செல்போனில் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story