குற்றச்செயல்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி


குற்றச்செயல்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அருப்புக்கோட்டையில் குற்றச்செயல்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் நகை, பணம் திருட்டு என அடுத்தடுத்து நடைபெற்று வரும் குற்ற செயல்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் டவுன் போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பஸ் நிலையம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பஸ்சில் செல்லும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, பயணம் செய்யும்போது சந்தேக படும்படியான நபர்கள் அருகில் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு கொடுத்து பணம் எடுத்து தர சொல்ல கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சிவன் வேடம் அணிந்த நபர் மூலம் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story