விழிப்புணர்வு பேரணி
சிவகாசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிவகாசி,
பிளாஸ்டிக் ெபாருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவர்குளம் ஊராட்சி சார்பில் நேற்று காலை பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை தொடங்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிராஜ், ஊராட்சி செயலர் கருப்பசாமி, சுகாதார ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.