போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவள விழா ஆண்டை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருளை தடுப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கல்லூரி சாலை, ரெயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வேலாயுதராஜா செய்திருந்தார். இதில் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குணசேகரன், சரவணன், உடற்கல்வித்துறை இயக்குனர் அசோக்குமார், தமிழ் துறை விரிவுரையாளர்கள் தங்கராஜ், பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story