மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:45 AM IST (Updated: 18 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கோட்டூர், திருக்களாரில் நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஜான்சன் சாந்தகுமார் தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார கல்வி அலுவலர் செல்வம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன், உடற்கல்வி இயக்குனர் அலெக்சாண்டர், முதுகலை ஆசிரியர் இளம்பருதி, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story