விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தலைமை அலுவலகத்திலிருந்து மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் தேன்மொழி முன்னிலையில் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மின்வாரிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. செல்லும் வழியில் மின்சார சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பேரணியில் நகரசபை தலைவர் மாதவன், மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி, உதவி என்ஜினீயர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story