விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

மல்லாங்கிணறு பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

மல்லாங்கிணறு பேரூராட்சி சார்பில் விருதுநகர் கல்குறிச்சி மெயின் ரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்பது குறித்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார்.

பின்னர் பிளாஸ்டிக்குறித்து பொது மக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் விருதுநகர் மெயின்ரோடு, பஸ்நிலையம், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் தோறும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கியும், மஞ்சள்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மிக்கேலம்மாள், கவுன்சிலர்கள் கருப்பையா, முருகேசன், மகாலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story