போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் முன்னாள் சட்ட அமைச்சர் செ.மாதவன் நிறுவிய பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் அதன் தலைவர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், பள்ளியின் தாளாளர் அருளாளன் ஆகியோர் தலைமையில் மாணவர் தினத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளி, எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிரைமரி பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பேரணியை முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராம. அருணகிரி, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி விஜய சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தி.மு.க. நகர செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர அவை தலைவர் சிவக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரிசேகர், பாரி வள்ளல் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஷியாம் பிராங்கிளிங் டேவிட், பள்ளி மேலாளர்கள் கிருஷ்ணன், சரவணன், கல்வி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் டி.என்.பி.எஸ்.டி. போட்டி தேர்வு சிறப்பு ஆசிரியர் எஸ்.எஸ்.மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி சிங்கம்புணரி சீரணி அரங்கில் தொடங்கி சுந்தர் நகர் வழியாக திண்டுக்கல், திருப்பத்தூர் சாலை நோக்கி சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் சென்று முடிந்தது. பேரணி முடிவில் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேசினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பிரதிநிதி புகழேந்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சிங்கை தருமன், ஜமாத் தலைவர் ராஜா முகமது, பேச்சாளர் உதயன், பார்த்திபன், பாரிவள்ளல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சூர்யா, முரசொலி கார்த்திக் பா.ஜனதா கண்ணையா, செந்தில்குமார், மேலத்தெரு முருகேசன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.