விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார திருவிழாவின் ஒரு பகுதியாக குடல் புழு நீக்கம், ரத்தசோகை மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது. தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மரக்கடை பஜார், நேரு மைதானம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்ற இந்த பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story