விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

வெம்பக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்து அறிவு, கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி இந்த பேரணியை ெதாடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். பேரணியில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் திலகராஜ், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இ்ந்த பேரணியானது வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் செய்திருந்தனர்.


Next Story