சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x

விராலிமலையில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளசாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு விராலிமலை தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். பேரணியானது விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம், கடைவீதி வழியாக சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் கள்ளசாராய விற்பனைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, மது அருந்தி வாகனம் ஓட்ட வேண்டாம், மதுப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வருவாய்த்துறையினர் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் கள்ளசாராயம் மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு பாடல்களும் இடம்பெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வளர்மதி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story