கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி


கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி
x

கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பேரணியில் தமிழ்வழி கல்வி பயின்றோர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, உயர்கல்வி பயில 7.5 சதவீதம் ஒதுக்கீடு, கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை, பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்திடுவோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவநடைந்தது. பேரணியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, கல்வி மாவட்ட அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சிவராமன், திருக்கோவிலூர் சாந்தி மற்றும் அரசு பள்ளி மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story