புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி


புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி
x

விக்கிரவாண்டி பேரூராட்சியில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் பேரூராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துணை தலைவர் பாலாஜி, நியமனக்குழு தலைவர் சர்க்கார் பாபு, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், லயன்ஸ் சங்க தலைவர் அருண் விஜி, செயலாளர் பிரபாகர், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புகையில்லாத போகி பண்டிகையை கொண்டாடவேண்டும் எனவும், வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறும் அறிவுறுத்தியதோடு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினர். அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் போன்ற பொருட்களை துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினா்.


Next Story