கூடலூரில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு பேரணி
கூடலூரில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு பேரணி
கூடலூர்
கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் காவல்துறையும் இணைந்து விபத்தில்லா தீபாவளி மற்றும் புகையில்லா தீபாவளி என்ற விழிப்புணர்வு பேரணி கூடலூரில் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று காந்தி சிலை முன்பு வந்தடைந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்குமார் முன்னிலை வகித்தார். பேரணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், சுசிலா, உதவி பேராசியர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் தீபா, மணிகண்டன், செல்வகுமார், அலுவலக கண்காணிப்பாளர் ஜார்ஜ் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணியில் உச்சநீதிமன்ற அறிவுறுத்திய பசுமை பட்டாசுகள் கொண்டு தீபாவளி கொண்டாடுவோம். பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை போன்ற விழிப்புணர்வு பதாகைகள் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பேரணியில் கையில் ஏந்தி சென்றனர்.