மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
x

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்ன் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து இன்று விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியாது சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் 75 ஆசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

இட ஒதுக்கீடு

பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து, அரசால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினர்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (குன்னூர்) புனிதா அந்தோணியம்மாள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story