போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராமு, அரசு கலைக்கல்லூரி தமிழ் துறைத் தலைவர் ஜெகதீசன், நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் போதை தடுப்பு குறித்த கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.