விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்
உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.அவரை தொடர்ந்து மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் சிவசிந்து, தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட இயக்குனர் ஜெகதீஸ் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். அதையடுத்து குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story