வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
x

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது.

கரூர்

நச்சலூர்,

குளித்தலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் குறிச்சி அம்பேத்கர் நகரில் நடைபெற்றது. இதில் நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் கலந்து கொண்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம், பிரதம மந்திரி நிதி உதவி திட்டம், உழவர் கடன் அட்டை மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சம்பா பருவத்திற்கான நெல், உளுந்து, எள், துவரை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்து உரங்கள், உயிர் விதை நேர்த்தி மருந்துகள், உயிர் பூஞ்சான மருந்துகள் தங்களது பகுதி நங்கவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடையுமாறு விவசாயிகளிடம் எடுத்து கூறப்பட்டது.முகாமில் வேளாண் திட்டங்களை பற்றியும் தொழில்நுட்ப செய்திகள் பற்றியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் தென்னங்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் விவசாயிகளின் சார்பாக ஆற்றலரசு என்கிற சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story